மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 3ஆம் திகதி சனிக்கிழமை இரதோற்சவம் இடம்பெற்று 4ஆம் திகதி ஞாயிற்று கிழமை தீர்த்தோற்சவம் நடைபெற்று நிறைவடையவுள்ளது.

இதன் போது பலபாகங்களில் இருந்தும் வருகை தந்த பெருந்திரளான மக்களது அரோகரா கோசங்களோடு மேள வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்