17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்