அழகுகலை பயிற்ச்சி நெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-தம்பிலுவில் நிருபர்-

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பியூட்டி கல்சரல் கோர்ஸ் அன்ட் டெக்நிகல் ஹெளஸ் (Beauty Culture Course & Technical House Maintenance) பயிற்சி நெறியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வனது அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனின் அனுசரனையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன் இவ் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் அழகு கலை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களினால் அழகுபடுத்தப்பட்ட பெண்களின் மணப்பெண் அலங்கார கண்காட்சியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்