ஏப்ரல் 21 தாக்குதல்: ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடத்தப்படவுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை குறித்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 10.30 முதல் மாலை 5.30 வரை நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளைய தினம் சபை நடவடிக்கைகள் முற்பகல் 9.30 அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்