கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத கால சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்க்கான தற்காலிக பொருளாதாரத் தடை விலக்கை இனிமேல் நீட்டிக்கப் போவதில்லை என அமெரிக்கா கடந்த 15ஆம் திகதி அறிவித்திருந்த பின்னணியில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
இதன்படி, அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் மே 16 ஆம் திகதி வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க திறைசேரி திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.