-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5 கமநல சேவை திணைக்களங்களுக்கு, காற்றழுத்த துப்பாக்கிகள், மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர முதன்மை அதிதியாக கலந்து இதனை வழங்கி வைத்தார்.
விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகளுக்காக இந்த 19 காற்றழுத்த துப்பாக்கிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், உதவி பிரதேச செயலாளர் ரொசானா ரசீம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.முஜீப், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.றிபான், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.கே.எம்.சப்றான், கிளீன் சிறிலங்கா இணைப்பாளர் எம்.றம்சி,மூதூர் பிரதேச செயலக கணக்காளர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

.