திருமலையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாறை வரை குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை

-கிண்ணியா நிருபர்-

அண்மையில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து இடம் பெற்றது.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் இதன் போது கிழக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

தினசரி பயண அட்டவணை

அம்பாறையில் இருந்து காலை – 04.45
•• மட்டக்களப்பில் இருந்து காலை – 06.15
•• திருகோணமலை சென்றடையும் நேரம் – காலை 08.15

திருகோணமலையில் இருந்து பிற்பகல்
•• திருகோணமலையில் இருந்து புறப்பாடு பிற்பகல் – 02.15
•• மட்டக்களப்பை சென்றடையும் நேரம் மாலை – 04.45
•• அம்பாறை சென்றடையும் மாலை நேரம் – 06.30

செல்லும் வழிப்பாதைகள்

திருகோணமலை – கிண்ணியா – மூதூர் – சேருநுவர – வெருகல் – வாகரை – நாவலடி – திருகோணமடு – ஒட்டிமாவடி – வாழைச்சேனை – செங்கலடி – ஏறாவூர் – மட்டக்களப்பு – காத்தான்குடி – கல்முனை – சம்மாந்துறை – அம்பாறை
இருக்கை முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அழைக்கவும் 0777205475

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்