ஹப்புத்தளையில் விபத்து : 23 வயது சாரதி படுகாயம்

-பதுளை நிருபர்-

 

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில், பண்டாரவளை சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு சென்று, மீண்டும் பண்டாரவளை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஹப்புத்தளை பண்டாரவளை வீதியில் காஹகல்ல பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்தது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சாரதி காகொல்ல பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு உடனடியாக தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த லொறியின் சாரதி 23 வயதுடைய பண்டாரவளை லியங்காவலை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.