வீதியோரம் காரை நிறுத்தி டயர் மாற்றிக்கொண்டிருந்தவருக்கு நிகழ்ந்த பரிதாபம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57 கிலோமீற்றர் தொலைவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிகம, கொக்மாடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பின்னதுவையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த கார் ஒன்றின் சாரதி வீதியோரம் காரை நிறுத்தி, பின்பக்க டயரை மாற்றிகொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே திசையில் பயணித்த மற்றுமொரு வாகனம் காருடன் மோதியதில் வாகனத்தில் இருந்து இறங்கி டயர் மாற்றிக் கொண்டிருந்த நபர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மற்றைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  நெடுஞ்சாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.