மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து: சிறுவன் படு காயம்

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக சிறுவன் ஒருவன் சைக்கிளில் பாதையை கடக்க முற்பட்ட வேளை எதிரே வந்த தனியார் பேருந்து குறித்த சிறுவன் மீது மோதியதையடுத்து வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியுள்ளது.

இதேவேளை காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்