கொழும்பு – புறக்கோட்டை, புதிய சோனக தெரு பகுதியில் அமைந்துள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைத் திணைக்களத்தினால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது தீப்பரவலுக்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவத்தின் காரணமாக டேம் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.