தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில், மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கடுமையான மழை காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்தார்.
குறித்த வீதியில் பயணிக்கும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.