இந்த ஆண்டு நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே எம்மால் முடிவெடுக்க முடியும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என்பதுடன், ஜூன் மாத மதிப்பீட்டின் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.