கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் குழந்தை பிரசவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாணவி வகுப்பறையில் சோர்வுடன் காணப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய் கிழமை கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து மாணவி கழிவறைக்கு சென்ற நிலையில் திடீரென்று கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வந்த பொலிஸார் குழந்தை மற்றும் மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்ததில் மாணவிக்கும் குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்துள்ளது.

இதனையடுத்து மாணவி கர்பமடைந்துள்ளதுடன் தமது வீட்டாருக்கு தெரியாமல் மறைத்த நிலையில் நேற்றைய தினம் குழந்தையை பிரசவித்துள்ளார்.

மேலும் தற்போது இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்