மட்டக்களப்பு வந்தாறுமுலையில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து

மட்டக்களப்பு வந்தாறுமுலை பகுதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனமொன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதன் சக்கரம் உடைந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினால் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதாக அங்கு நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது டிப்பரில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்