மட்டு.ஆரையம்பதியில் சற்றுமுன் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் குறித்த பெண்  காயங்களுக்குள்ளாகிய நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்