கதிர்காமத்தில் நீராடிய நபர்: கவ்விச்சென்ற முதலை

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்த நபர் முதலையால் கவ்விச்செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் நேற்று சனிக்கிழமை காலை மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது முதலையால் கவ்விச்செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உயிர்காக்கும் படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்