பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது

பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

“பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச் சட்டம் தடுக்கிறது, அதே நேரத்தில் குடிமகன் அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும் சட்டம் தடை செய்கிறது” என்று தேசப்பிரிய டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்றும், அவர் ஒருபோதும் எமது தேசிய முண்ணணியின் பொதுச் செயலாளராக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான அரசியல் கூட்டணியை முறித்துக் கொண்ட காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் மறைந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் எமது தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது.

அப்பேரவை ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளராக ருவான் பெர்டினாண்டாஸ் இருந்த நிலையில், டயானா கமகேவின் கணவர் அப்பதவியை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்