புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்: ஜனாதிபதி

 

திருடர்களை பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று புதன் கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ‘ஊழலை ஒழிப்போம்’ என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்