போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் 440 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 1020 ஹெரோயின் போதைப் பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை பண்டாரவளை ஹப்புத்தலை வெலிமடை எல்ல ஏனைய பகுதிகளுக்கு விநியோகிப்பதற்கு குறித்த போதைப்பொருள் கொண்டு வரப்படடு இருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து வரைபடத்தின் உதவியுடன் விநியோகித்து வந்துள்ளதுடன் குறித்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் போன்ற இடங்களில் குழிகள் தோண்டி போதைப்பொருள் பொதிகளை புதைத்து வைத்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்