வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நாசம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல_38ல் உள்ளஇபெரியகுளம் -விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு வீட்டின் உரிமையாளர் திருகோணமலை கடற்படைக்கு முன்னால் தனது கடையில் தங்கியுள்ள நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது வீடு தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந் நிலையில் இத் தீ சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 க்கு அறிவித்துள்ள நிலையில் தீயனைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எறிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயிர் சேதம் எதுவும் இடம் பெறவில்லை

வீடு தீ பற்றியமை தொடர்பில் காரணம் இது வரைக்கும் வெளியாகவில்லை.

இச் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்