அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை விதித்த நாடு

இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்