பால் குடித்துவிட்டு உறங்கிய பெண் குழந்தை, திடீரென உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் கர்ஷா (வயது 3 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயார் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.
அதன்பின்னர், காலை 6 மணியளவில் குழந்தையை பார்த்தவேளை, மூக்கினால் பால் வெளிவந்த நிலையில், குழந்தை விறைத்து காணப்பட்டுள்ளது.
உடனே குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தை நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.