
14 வயது சிறுவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயம்
அம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனொருவரே காயமடைந்துள்ளார். இவர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும் போது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான 14 வயது சிறுவன் விஷம் அருந்தியுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தி குத்துக்கு இலக்கான 9 வயது சிறுவனின் வீட்டில் பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேக நபரான 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்