சுகயீனம் அடைந்த நிலையில் திடீரென உயிரிழந்த 15 வயது சிறுவன்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை சுகயீனம் அடைந்த நிலையில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் (வயது -15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் 21 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளார்.

குடல் அலேர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்