காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் மஹிந்த தேசப்பிரிய
காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்றைய தினமான 14 ஆவது நாள் போராட்டக் களத்தில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பங்கேற்றுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவரும் அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.