வரலாற்று சாதனை படைத்த சுற்றுலாத்துறை

வரலாற்றில் முதல்முறையாக, ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த மாதமாக ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 208,253 ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்