தனியார் காணியில் இருந்து கைக்குண்டு மீட்பு

-பதுளை நிருபர்-

ஹாவிஎல பகுதியில் தனியார் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி விகாரைக்கு அருகில் தனியார் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து எஸ்.எஃப்.ஜி (ளுகுபு) ரக கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டை எவரேனும் அவ்விடத்தில் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனவும் குறித்த கைக்குண்டு சம்பந்தமான அறிக்கை ஒன்றை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளதாகவும் கைகுண்டை செயலிழக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்