கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா: ஒருவர் கைது
புத்தளத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கலாஓயாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கிடைத்த தகவலின்படி, ராஜாங்கனை பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டது.
அங்கு, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 203 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 94 கவர்கள் வைத்திருந்த நாபர் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்