நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
இந்தியாவில் மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்துவரும் 17 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 9 மோட்டார் சைக்கிள்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, அனைவரும் கடலில் குளித்தபோது 3 பேர் அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் சடலமாக கரை ஒதுங்கிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்