வெடிக்காத துப்பாக்கித் தோட்டா ஒன்று மீட்பு
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியொன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட துப்பாக்கித் தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைத்துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திர விடுதியின் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரால் குறித்த தோட்டா கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்