மாணவர்களுக்கு பெறுமதியான நூல்கள் வழங்கி வைப்பு
திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று புதன் கிழமை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 1930 ரூபா பெறுமதியுடைய புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பூம்புகார், பாலையூற்று போன்ற பின்தங்கிய ஊர்களில் அமைந்துள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொருவருக்கும் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இந்த புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நூல்களை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன், பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்