விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் காட்டுப்பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாகவும் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தங்கபுரம்-தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என தெரியவருகின்றது.
வீட்டிலிருந்து இன்று காலை 11.00 மணிக்கு விறகெடுப்பதற்காகச் சென்றபோதே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுக்குச் சென்ற நபர் ஒருவர் சடலமொன்று கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலம் இன்று மாலை பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளதுடன் , பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்