சிறப்பாக இடம்பெற்ற பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர் ஜே.எஸ்.வி.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விருந்தினர்களாக பேசாலை உதவி பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அல்பன் ராஜ் அடிகளார், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜி.ரி.தேவராஜா உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இல்லங்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172