
அழகுசாதன பொருட்களால் புற்றுநோய்: மக்களுக்கு எச்சரிக்கை
அழகுசாதன பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்கள் இருப்பதாகவும், பாதரசம் போன்றவற்றை பயன்படுத்தி சில அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் அது தோல் புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைப் புள்ளிகள், முகம் சிவத்தல், முகப்பரு அனைத்தும் அழகுசாதனப் பொருட்களால் ஏற்படுவதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் இந்திரா கஹதவி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்