
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஒரு மணிவரையான தமது உணவு வேளையில் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டாம் திகதி 7 ஆம் இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்