
மலாவியின் துணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போயுள்ளது
மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் இன்று திங்கள்கிழமை காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் நடந்து வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
51 வயதான துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற விமானம் தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்டது, ஆனால் 45 நிமிடங்களுக்குப் பிறகு வடக்கே சுமார் 370 கிலோமீட்டர் (230 மைல்) தொலைவில் உள்ள ஆணரணர சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட தரையிறக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாவிய ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவின் அலுவலகத்தின் அறிக்கையின்படி, விமானம் “ரேடாரில் இருந்து வெளியேறியபோது” விமானத்துடனான தொடர்பை விமான அதிகாரிகள் இழந்துள்ளனர்.
“ரேடாரில் இருந்து மறைந்துள்ள விமானத்துடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்