கைவிடப்பட்டது ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு ரயில் முனையங்களைச் சேர்ந்த சுமார் 80 ரயில் இயந்திர இயக்குநர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதையடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் மாலை நேரம் சில ரயில் பயணங்கள் இரத்தாகலாம் எனவும் நாளை செவ்வாய் கிழமை காலை முதல் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க