“பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” : கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் முன்னெடுக்கப்பட்டது.

சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தொடக்கவுரையினை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆற்றினார்.

கருத்துரைகளை சட்டத்தரணி ந.சிறிகாந், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் ஆற்றினர்.

நிகழ்வில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான கே.சஜந்தன், து.ரவிகரன், இ.ஆனல்ட் ஆகியோரும், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சீ.வி.கே .சிவஞானம் தெரிவிக்கையில்

நாம் எவ்வாறான கருத்துக்களைக் கூறினாலும் மக்கள் புறக்கணிப்பதா என்ன செய்வது என தீர்மானிப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தல் செப் 17 தொடக்கம் இடம்பெறும் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் தொடர்பில் சாதக பாதக விடயங்கள் ஆராயப்படுகின்றது.

பொது வேட்பாளர் தொடர்பாக எனது பார்வையில் தமிழ் வேட்பாளர்களை எவ்வாறு அணுகுவது தொடர்பான விடயம் உள்ளது.

நாம் பல காலமாக நிலை நிறுத்திய வேட்பாளர் தனிமைப்படுவார் என்கிற நிலமையுள்ளது.

நாங்கள் பொது வேட்பாளருக்கு எதிரானவர்கள் அல்ல மக்கள் தீர்மானிக்கும் வகையில் கருத்துகளை சொல்கிறோம். மக்கள் இதனைத் தீர்மானிப்பார்கள் – என்றார்.

அருளானந்தம் சர்வேஸ்வரன் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளன் விடயத்தை நான் ஆதரிக்கவில்லை, உலகில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளன.

ஸ்பெயினில் நடந்த வாக்கெடுப்பைக் கூறலாம், ஐனாதிபதி தேர்தலி்ல் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இரண்டில் ஒரு முடிவில் இருப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக எமது கருத்துக்களை அரசாங்கத்திற்கு கூறமுடியாது. பல உதாரணங்கள் உள்ளன. ஒஸ்லோ மாநாட்டிலும் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.

புதிய அரசியல் யாப்பினை மாற்றியமைக்கும் குழுவில் இருந்தோம் அதில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்க மாட்டார்கள் என்று கூறினேன்.

அரசியல் அமைப்பாக வேறு மதம் வேறு இதனை பெளத்தத்திற்கு முதலிடம் கொடுப்பது தவறு எனக்கூறினேன்.

தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உடன்படவில்லை எமது எதிர்பைக் காட்டும் வகையிலான வாக்கினை எடுக்க வேண்டும்.

தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள மொத்த வாக்குகளில் கணிசமான வாக்கினைப் பெறுபவராக இருக்க வேண்டும்.

நாம் இப்போது 6 கட்சிகளாக பிரிந்து உள்ளோம்.

மலையக மக்களை நாம் இணைக்கவில்லை அவர்களின் பிரச்சனைகள் வேறு, எமது பிரச்சனைகள் வேறு, கிழக்கு மாகாணத்திலுள்ள பல அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை விரும்பவில்லை

பொது வேட்பாளர் மேலும் கட்சிகள் பிரிவடையும். 2024 இல் பொது வேட்பாளரை நிறுத்தினால் 2029 இலும் நிறுத்த போகிறோமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதும் நாம் பொது பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றுதான் என்றார்.

முன்னாள் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கையில்,

எமது எல்லைகளில் பயங்கரமான திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. எப்படி தமிழ் மக்களை பாதுகாப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எனது தனிப்பட்ட கருத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகளாக ஒன்று சேர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும், என்றார்.

சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

தற்போது என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிய வேண்டும் கலந்துரையாடலுக்கு அழைக்கும் போது வரவில்லை, ஏன் ஒழித்து ஓடுகிறார்கள், கருத்து சொல்லாது தடுப்பது பாசிசவாதம்.

பொது நிலைப்பாடும் வாக்கெடுப்பும் என்பதனை நாம் 1951 ஆம் ஆண்டு பேச தொடங்கி விட்டோம்.

 

நாங்கள் தனியான இனம், எமது கலாசாரங்களை சொல்லி 51 ஆம் ஆண்டு தேர்தல் கேட்டோம். மக்கள் அன்றிலிருந்து இன்று வரையும் சமஸ்டி கோரிக்கைக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை.

சர்வதேசத்திலும் இலங்கையிலும் சமஷ்டி தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையை யாரும் சவாலுக்கு உட்படுத்தவில்லை.

அரச கட்சிகள் அரச தலைவர்கள் செய்யும் வேலையை அரசியல்வாதிகள் தான் செய்ய வேண்டும். சிவில் சமூகம் செய்ய வேண்டிய வேலை அல்ல தேர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வு அதை நாம் விட்டுவிட முடியாது.

நாம் விட்டு ஓடி விட மாட்டோம். ஆனால் இலகுவாக தூரோகிப்பட்டம் சூட்டுவார்கள். தமிழ் பொது வேட்பாளரை நியமித்தால் அதற்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்வோம். அதிலே எமக்கு பொறுப்புள்ளது. அவ்வாறு நிற்பது கோமாளிகள் செய்யும் வேலை, என்று கூறினார்.

சட்டத்தரணி, தமிழ் தேசிய கட்சி – தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா தெரிவிக்கையில்,

சுமந்திரனின் வழக்கத்திற்கு மாறான உரையுள்ளது. நண்பர்களே நாம் இந்நாட்டில் அடக்கி ஒடுக்கப்படும் இனம். நாம் பல துன்பங்களை சுமந்தோம். மந்திரி சபை வெள்ளையர்கள் போக முன்னரே ஆரம்பித்து விட்டனர். முல்லைத்தீவு கொக்கிளாய், நாயாறு உள்ளிட்ட பழம்பெரும் இடங்களை பிரித்து எம்மை வேறாக்க நினைத்தனர்.

எங்கள் தொன்மைக்கு இன்று சவால் வந்துள்ளது. இன்று மூன்று பிரதான வேட்பாளர்கள் உள்ளனர்.

நண்பர் அனுர பல தடவை கோல் எடுத்தார்,  நான் பேசவில்லை, 2009 யுத்தம் முடிந்து நடை பிணமாக வாழ்கின்றனர்,  நாளை ரணிலோ, சஜித்தோ, அனுரவோ சமஷ்டியை பரிசீலனை செய்ய தயாரில்லை.

கட்சிகளோ, அரசியல்வாதிகளோ பிரச்சனை அல்ல பெரும்பான்மையான இனத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும். எமைப்பற்றி சிந்திக்காத எந்த கட்சிக்கும் நாம் வாக்களிக்க மாட்டோம். சர்வதேச வகிபாவம் ஆரோக்கியமாக இருக்கும் போது எமது சிங்கள தலைவர்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம்.

நாம் கட்சியாக மட்டும் பிரிந்துள்ளோம். ஆனால் நாம் பிரியவில்லை பல்லவன், சோழன் காலத்திலிருந்து தமிழர்கள் இவ்வாறு தான்.

ஆயுதம் ஏந்தி போராடினவர்கள் மண்டை ஓடுகளாக சிதறி உள்ளார்கள்.

எனது சட்டக்கல்லூரி நண்பன் ரணில்,

சஜித் அமுல் பேபி போலுள்ளார்,  தந்தை பிரேமதாஸ நண்பருக்கு நண்பன் துரோகிக்கு துரோகி, என்று கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172