
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் முகம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்