
மட்டக்களப்பு வவுனதீவில் பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை : ஒருவர் கைது
மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனே இதன்போது 5 பரல் கோடா மற்றும் 150 போத்தல் கசிப்பு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தெரிவித்தார்.
வவுனதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
வவுனதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்