சிசு செரிய பேருந்து சேவைக்கு மேலும் 500 பேருந்துகள்

சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (என்.ரி.சி) பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்காக மானியமாக 2,000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க