
சட்டவிரோத தங்கம் தோண்டல்: பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் தங்கம் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐவர் இராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு நவீன மெட்டல் ஸ்கேனர்கள் மற்றும் சொகுசு ஜீப் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் பொலிஸ் தலைமையகத்தில் ‘பொலிஸிடம் சொல்லுங்கள்’ நடவடிக்கையின் ஓ.ஐ.சி ஆகப் பணியாற்றிய நபர் மற்றும் ஏறாவூர் அரச பாடசாலையின் ஆசிரியரும் உள்ளடங்குவதாக தெரிவிக்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட தங்கம் அப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் தங்கத்தை தோண்டி எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்