
வயிற்றுக்குள் கொக்கெய்ன் மாத்திரைகள் கடத்திய வெளிநாட்டு பிரஜை
உகண்டா பிரஜை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதான உகண்டாவைச் சேர்ந்தவர் எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்