
இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கை
அவுஸ்திரேலியாவில் உள்ள தமது குடும்பத்தை பார்வையிட சென்ற இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய் காரணமாக அவரது கை ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
74 வயதுடைய குறித்த பெண் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கி இந்த வருட ஆரம்பத்தில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் அங்குள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்ற நிலையில் புருளி அல்சர் எனப்படும் சதையை உண்ணும் ஒருவகை பக்றீரியா தாக்கத்திற்கு உள்ளாகி அவரது இடது கையில் காணப்பட்ட வீக்கம் காரணமாக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குறித்த நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நோயை கட்டுப்படுத்துவதற்காக வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் குறித்த பெண்ணின் இடது கையை அகற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்