
மட்டக்களப்பு ஐவா தாதியர் பயிற்சி பாடசாலையின் தொப்பி அணிவித்தல் நிகழ்வு
மட்டக்களப்பில் ஐவா தனியார் தாதியர் பயிற்சி பாடசாலையினால் தாதியர் மற்றும் ஆய்வுகூட தொழில் நுட்ப வல்லுனர் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தொப்பி அணிவித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தொப்பி அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி. முரளிதரன் கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், மற்றும் ஐவா தாதியர் பயிற்சி பாடசாலை விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது திறமை சித்தி அடைந்தவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்