ரயில் சாரதிகள் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதன் காரணமாக இன்று சனிக்கிழமை காலை 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபோலேஜ் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க