முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்ற தம்பதிகள்: கைவரிசையை காட்டியதால் கைது

வாத்துவ பகுதியில் முறைப்பாடு ஒன்றுக்காக நேற்று வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணப்பை ஒன்றை திருடிய கணவன் – மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்ய கணவன் – மனைவி தம்பதியொன்று வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் பணப்பையை திருடியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து வாத்துவ குரே மாவத்தையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க