வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய புதிய நாடு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் 120 மில்லியன் யூரோ செலவில் புதிய கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை இந்த கருவி, வெவ்வேறு கிரகங்களின் வளிமண்டல வேதி கூட்டமைப்பைக் கண்டறிந்து, அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதற்கான அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், வேற்று கிரகவாசிகளை தேடும் இந்த திட்டமானது, 2032 இல் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க