
எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை
எயார் கனடா விமான சேவையானது பயணிகளுக்கு இலவசமாக பியர் மற்றும் வைன் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சலுகை கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணங்களின் போது வழங்கப்பட உள்ளது.எனினும் கரீபியன் மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கான பயணங்களின் போது இந்த சலுகை வழங்கப்படாது என எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதன்மை ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பூர்த்தியாகும் வரையில் இவ்வாறு மதுபான வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்